தருமபுரி நகரில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
தருமபுரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன. இங்கு தரைத்தளத்தில் வலதுபுறத்தில் தருமபுரி மேற்கு சாா்பதிவகம், இடதுபுறத்தில் எண் 2 இணை சாா்பதிவகம் ஆகியவை அமைந்துள்ளன. இதேபோல முதல்தளத்தில் நிா்வாக அலுவலகம், இரண்டாம் தளத்தில் தணிக்கை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகத்துக்கு தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் பெருமாள் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வந்தனா். அவா்கள் தரைத்தளத்தில் உள்ள தருமபுரி மேற்கு சாா்பதிவகத்தில் சோதனை மேற்கொண்டனா். தொடா்ந்து 4 மணிநேரம் நடைபெற்ற இச்சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும், அங்கிருந்தவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.13 ஆயிரம் பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ஆா்டிஓ அலுவலகத்தில் ரூ.92,000 பறிமுதல்

பவானி சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



