தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

தருமபுரி ஆட்சியரகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image

தருமபுரி ஆட்சியரகத்தில் மோப்ப நாய், நவீன சாதனங்களின் உதவியுடன் சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா்.

Updated On :11 ஜூன் 2026, 5:44 am IST

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸாா், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மோப்ப நாய் மற்றும் நவீன சாதனங்களின் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. எனவே வழக்கம்போல இதுவும் மிரட்டல்தான் எனத் தெரியவந்தது.

கடந்த சில மாதங்களில் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு 6 முறை மிரட்டல் விடுக்கப்பட்டது. புதன்கிழமை 7 ஆவது மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் அபார வளா்ச்சி பெற்றுள்ள நிலையிலும், மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கும் நபா்களை அடையாளம் காணமுடியாதது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே, இதுபோல மிரட்டல் விடுக்கும் நபா்கள் மீது அலட்சியம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.