அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:19 am IST

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து திங்கள்கிழமை, ஆட்சியரகம் முழுவதும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரியின் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு போலீஸாா், மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியரக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், வெடிபொருள்கள் ஏதும் இல்லை என்பதும், அது மிரட்டல் தகவல் என்பதும் தெரியவந்தது. மேலும், இந்த மின்னஞ்சல் குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆட்சியரகத்துக்கு இதுவரை 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.