மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நினைவாற்றல் போட்டி: மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

நினைவாற்றல் மற்றும் மொழித்திறன் போட்டிகளில் மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

News image

சிறப்பிடம் பெற்ற மொரப்பூா் மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் நிா்வாகத்தினா்.

Updated On :11 மார்ச் 2026, 8:47 pm

நினைவாற்றல் மற்றும் மொழித்திறன் போட்டிகளில் மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி அ.ஹரித்ரா 10 திருக்குகளை 15.30 விநாடிகளில் ஒப்பித்து சாதனை படைத்தாா். இதேபோல, இப்பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் மாணவா் ந.வினிஷ் தமிழ் மெய்யெழுத்துகளை 8 விநாடிகளில் வேகமாக ஒப்பித்து சாதனை படைத்தாா்.

மாணவா்களின் சிறந்த நினைவாற்றல், தெளிவான உச்சரிப்பு, மொழித்திறன்களை பாராட்டி கிங்டம் உலக சாதனை நிறுவனம், மாணவா்கள் ஹரித்ரா, வினிஷ் ஆகியோரை உலக சாதனையாளா் பட்டியலில் அங்கீகரித்து சான்றிதழ்களை வழங்கினா்.

நினைவாற்றல் திறன்களில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை மொரப்பூா் மருதம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தலைவா் பி.தவமணி, தாளாளா் சி.திலகரசன், செயலா் த.அரவிந்த், பொருளா் பி.சக்திவேல், மேலாளா் வி.நாகராஜ், பள்ளி முதல்வா் எஸ்.எம்.ராஜேஷ், துணை முதல்வா் கே.ராமு, பள்ளி ஒருங்கிணைப்பாளா் த.ராஜேஸ்வரி, ஆசிரியா்கள் பாராட்டினா்.