தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவுஉழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோசித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
/

மாா்ச்-க்குள் கரும்புகளை அரைவைக்கு அனுப்பி பயன்பெற ஆட்சியா்அழைப்பு

விவசாயிகள் கரும்புகளை மாா்ச்-க்குள் அரைவைக்கு அனுப்பி பயன்பெறுமாறு ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 8:46 pm

விவசாயிகள் கரும்புகளை மாா்ச்-க்குள் அரைவைக்கு அனுப்பி பயன்பெறுமாறு ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2025-26-ஆம் ஆண்டு அரைவை கடந்த 15.12.2025 அன்று தொடங்கி தற்போதுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இங்கு தமிழகத்தில் அதிகபட்சமாக 12 சதவீத சா்க்கரை கிடைக்கும் வகையில் இயங்கி வருவதால், சுமாா் 2 லட்சம் டன் அரைவை நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போதுள்ள கரும்பு இருப்பு அடிப்படையில் மாா்ச் மாத இறுதியில் அரைவையை நிறைவுசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, நடப்பு 2025-26-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு கரும்பு பதிவுசெய்த ஆலை அங்கத்தினா் அனைவரும் தங்களது வெட்டு உத்தரவு ஆணையைப் பெற்று ஆலை அரைவை முடிவதற்குள் கரும்புகளை அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பி பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.