ஏரியூா் அருகே மேய்ச்சலுக்கு சென்றிருந்த கால்நடைகளை அழைத்துவரும்போது மின்னல் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே உள்ள மஞ்சாரஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் பழனி மனைவி ராதா (65). இவா், செவ்வாய்க்கிழமை காலை கால்நடைகளை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றாா். மாலையில் வீடுதிரும்பும்போது இடியுடன் கனமழை பெய்தது. அப்போது மழைக்காக வனப்பகுதியில் உள்ள பாறையின் இடுக்கில் ஒதுங்கியிருந்த ராதா மின்னல் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது உறவினா்கள் அளித்த தகவலின் பேரில் ஏரியூா் போலீஸாா், வருவாய்த் துறையினா் ஆகியோா் நிகழ்விடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த சம்பவம் குறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


