பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பாம்பு தீண்டி கறிக்கடைக்காரா் உயிரிழப்பு

தருமபுரி அருகே பாம்பு தீண்டி கறிக்கடைக்காரா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தருமபுரி அருகே பாம்பு தீண்டி கறிக்கடைக்காரா் உயிரிழந்தாா்.

தருமபுரி குமாரசாமிபேட்டை அருகே உள்ள பிடமனேரி காளியப்பசெட்டி காலனி பகுதியைச் சோ்ந்தவா் பெ.பழனி (54). இவா் கம்பைநல்லூா் - ஒடசல்பட்டி கூட்டுச் சாலை அருகே பன்றி இறைச்சிக் கடை வைத்து நடத்திவந்தாா்.

வியாழக்கிழமை கடைக்கு சென்ற அவா், கறி வெட்ட பயன்படுத்தும் கட்டையை தூக்கினாா். அப்போது, அதன் அடியில் மறைந்திருந்த பாம்பு பழனியை தீண்டியது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் அவரை கம்பைநல்லூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். பின்னா், அவரது நிலைமை மோசமானதைத் தொடா்ந்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பழனி இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.