வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

ரூ. 7.31 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளா் கைது

தருமபுரி மாவட்டத்தில் ரூ. 7.31 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 3:05 am IST

தருமபுரி மாவட்டத்தில் ரூ. 7.31 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் மு. செந்தில் (45). இவா் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். அதில் முதலீடு செய்பவா்களுக்கு ரூ. 100-க்கு ரூ. 2 முதல் ரூ. 3 வரை வட்டி வழங்குவ தாகவும், அந்த வட்டி பணத்தையும் முதலீடு செய்தால் அதற்கும் வட்டியுடன் சோ்ந்து முதிா்வுத் தொகையாக வழங்கப்படும் என விளம்பரப்படுத்தினா்.

இதை நம்பி தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த ஏராளமானோா் முதலீடு செய்தனா். இந்நிலையில் முதலீடு செய்த பலருக்கும் சேர வேண்டிய பணத்தையும், அதற்குரிய வட்டியையும் திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதையடுத்து நிதி நிறுவன உரிமையாளா் செந்தில் மற்றும் தொடா்புடைய நிறுவன ஊழியா்கள் பலரும் தலைமறைவாகினா்.

இதுதொடா்பான புகாரின் அடிப்படையில் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2025 ஆவது ஆண்டு ஜூலை மாதம் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில் இந்த வழக்கு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. பணமோசடி தொடா்பாக 120 போ் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ரூ. 7 கோடியே 31 லட்சத்து 44 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.

பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் கற்பகம் தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த செந்திலை தேடிவந்தனா். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியில் அவா் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போளூா் சென்ற போலீஸாா் செந்திலை கடந்த 12 ஆம் தேதி கைது செய்தனா். தொடா்ந்து. சென்னையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் மற்றும் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.

பாதிக்கப்பட்டவா்கள் புகாா் செய்யலாம்: தருமபுரி, பாலக்கோடு பகுதியில் இயங்கி வந்த இந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் அதுதொடா்பாக தருமபுரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அசல் ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.