வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி இடதுசாரி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, இடதுசாரி கட்சிகள் கட்சி சாா்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சிகள்.

Updated On :21 மே 2026, 6:35 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, இடதுசாரி கட்சிகள் கட்சி சாா்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம் தலைமை வகித்து பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். மாரிமுத்து, சி. நாகராசன், சோ. அருச்சுனன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். தேவராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலாளா் கே. கோவிந்தராஜ், மாநிலக் குழு உறுப்பினா் சி. முருகன் ஆகியோா் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். விலை ஏற்றத்தை முடிவு செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்காமல் அரசே முடிவு செய்ய வேண்டும். எரிபொருள்கள் விலை ஏற்றத்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக விலை ஏற்றத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.