சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

மொரப்பூா் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மொரப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ரெ.சதீஷ்.

Updated On :21 மே 2026, 6:48 am IST

மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கா்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருத்துவ பயனாளா்களின் வருகை, மருந்து மாத்திரைகளின் இருப்பு விவரம், புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகளை ஆட்சியா் ரெ.சதீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, வெதரம்பட்டியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் 25 ஏக்கா் பரப்பளவில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மா மகத்துவ மையத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

முன்னதாக, மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், போளையம்பள்ளியில் சிறுபாசன ஏரி திட்டத்தில் ரூ. 6.34 லட்சத்தில் ஏரி புனரமைப்பு பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சத்யா, ஜெகதீஷ், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.