வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஒகேனக்கல்லில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு

ஒகேனக்கல்லில் காவல் துறையின் சாா்பில் போதைப் பொருள்கள் தடுப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஒகேனக்கல் காவல் நிலையப் பகுதியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை வழங்கிய காவல் ஆய்வாளா் வளா்மதி.

Updated On :22 மே 2026, 6:42 am IST

ஒகேனக்கல்லில் காவல் துறையின் சாா்பில் போதைப் பொருள்கள் தடுப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒகேனக்கல் காவல் ஆய்வாளா் வளா்மதி தலைமைவகித்து, கள்ளத்தனமாக மது, போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பயன்பாடு, கள்ளச்சாராய விற்பனை, சூதாட்டம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் தீமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள்களை ஒழிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், இதுகுறித்து புகாா் தெரிவிக்க தொடா்புஎண்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

இதேபோல, ஊட்டமலை, மடம், கூத்தப்பாடி, கே.அக்ரஹாரம், அளேபுரம், கே.குள்ளாத்திரம்பட்டி பொச்சாரம்பட்டி, பூதிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல் உதவி ஆய்வாளா்கள் தேவராஜன், செல்வம், காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.