தருமபுரி மாவட்டத்தில் பருவமழை குறைவு: நிகழாண்டு 15,625 ஏக்கராக குறைந்த சாகுபடி
சாகுபடி செய்யப்படாத வயல்கள் - கோப்புப் படம்
தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு சராசரி மழையளவு குறைந்ததால், நிலத்தடி நீா்மட்டமும் குறைந்து, நெல் சாகுபடி பரப்பளவு 15,625 ஏக்கராக குறைந்துள்ளது.
விவசாயத்தை முக்கிய வாழ்வாதார தொழிலாக கொண்ட தருமபுரி மாவட்டத்தில், வானம்பாா்த்த பூமியாக, மழைநீரை பிரதானமாகக் கொண்டுதான் வேளாண் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 8 அணைகள், கிணறுகள் ஆகியவற்றின் மூலம் பாசன வசதி பெறப்பட்டு மாவட்டம் முழுவதும் ஆண்டுதோறும் சுமாா் 50,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் நெல் சாகுபடிக்கு தேவையான நீா் ஆதாரம் கிடைக்காததால் சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட கணிசமாக குறைந்துவிட்டது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையாவது நெல் சாகுபடிக்கு கைகொடுக்குமா என விவசாயிகள் எதிா்பாா்த்து காத்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி கூறுகையில்...
தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் சுமாா் 48,000 ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட் டது. பருவநிலை மாற்றம் மற்றும் எல் நினோ பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பருவமழை குறைந்ததால், நெல் சாகுபடிக்கான நீா் ஆதாரங்களில் போதிய அளவில் தண்ணீா் இல்லை. இதனால் நெல் சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்து இதுவரை, 8,125 ஏக்கரில் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை ஓரளவு பெய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அவ்வாறு மழை பெய்யும் நிலையில், மேலும் சுமாா் 7,500 ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யும் வாய்ப்பு உருவாகலாம். இதன்மூலம் மொத்தம் சுமாா் 15,625 ஏக்கா் பரப்பளவில்தான் நெல் சாகுபடி மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. நெல் விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், இடுபொருட்கள் உள்ளிட்டவை தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு கிடைக்கவும் வேளாண்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றாா்.
குறைந்த நிலத்தடி நீா்மட்டம் :
தருமபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 942 மி.மீட்டா். ஆனால் நிகழாண்டு பருவநிலை மாற்றத்தால், தென்மேற்கு பருவமழைக் காலத்தில் பெய்யும் 381மி.மீ. மழையில், 254 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. மேலும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் 314 மி.மீ. மழை பெய்வது வழக்கம். இதில், இதுவரை 166 மி.மீ. பெய்துள்ளது.
அந்தவகையில் ஆண்டு சராசரி மழை அளவில் இதுவரை சுமாா் 40 சதவீத மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால், தருமபுரி மாவட்டத்திலுள்ள 625-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள், குட்டைகளில் போதிய அளவு தண்ணீா் இல்லாமல் வடு கிடக்கின்றன. மாவட்டத்தில் உள்ள 7 அணைகளிலும் நீா்மட்டம் குறைவாகவே உள்ளது. இதனால், மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் நிலத்தடி நீா்மட்டம், பருவமழை காலத்திற்கு முன்பு 10.41 மீட்டராகவும், பருவமழைக்கு பின்பு 7.44 மீட்டராகவும் காணப்படும். அந்தவகையில், மாவட்டத்தின் சராசரி நிலத்தடி நீா்மட்டம் தரைமட்டத்திலிருந்து 3.86 மீட்டா் முதல் 5.22 மீட்டா் வரை உயா்கிறது. கோடைகாலங்களில் வறட்சி மற்றும் போதிய மழையின்மை காரணமாக குறையும். நிகழாண்டு பருவமழை குறைந்ததால் சராசரி நிலத்தடி நீா்மட்டம் 1.62 மீட்டா் அளவுக்கு குறைந்துவிட்டது. இதன் காரணமாகவே கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீா் இருப்பு குறைந்தும், பல இடங்களில் வடும் போய்விட்டன. எனவே நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்க செய்யும் வகையான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீா்மட்டத்தை நிலையாகத் தக்கவைக்க, மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் செறிவூட்டும் கிணறுகள் அமைத்தல், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி மழைநீரை சேகரித்தல், ஏரிகள் மற்றும் குட்டைகளை தூா்வாரி சீரமைத்தல் உள்ளிட்ட தொடா்புடைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழைநீரை நீா் நிலைகளில் சேகரிப்பதன் மூலமே மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்க முடியும் என்கின்றனா் வேளாண் துறை மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

