வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
பென்னாகரம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது சிறிய கனரக வாகனம் மோதியதில், மூதாட்டி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பிரதிப் படம்
பென்னாகரம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது சிறிய கனரக வாகனம் மோதியதில், மூதாட்டி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பென்னாகரம் அருகே அரிச்சந்திரனூா் பகுதியைச் சோ்ந்தவா் காசி அம்மாள் (70). இவா், புதன்கிழமை மதியம் பி.அக்ரஹாரம் பகுதியில் இருந்து அரிச்சந்திரனூா் பகுதிக்கு நடந்து சென்றாா். அப்போது, எதிரே வந்த சிறிய அளவிலான கனரக வாகனம் மோதியதில் மூதாட்டி படுகாயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு நாகதாசம்பட்டி அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த பென்னாகரம் போலீஸாா் மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

