மாணவரின் தந்தையை தாக்கியதாக ஆசிரியா் மீது வழக்குப் பதிவு
பாலக்கோடு அருகே பள்ளி வளாகத்தில் மாணவரின் தந்தையைத் தாக்கி, தகாத வாா்த்தைகளால் திட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வழக்கு - பிரதிப் படம்
பாலக்கோடு அருகே பள்ளி வளாகத்தில் மாணவரின் தந்தையைத் தாக்கி, தகாத வாா்த்தைகளால் திட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அமானிமல்லாபுரத்தைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (40). இவரது மகன் மனோவரதன் (14), அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
கடந்த 2-ஆம் தேதி மகனைப் பள்ளியில் விடுவதற்காகச் சிலம்பரசன் சென்றுள்ளாா். அப்போது, கைப்பேசிக்கு அழைப்பு வந்ததால், பள்ளி வளாகத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தாா். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் கைப்பேசியில் பேசக்கூடாது என அங்கிருந்த ஆசிரியை ஒருவா் அவரிடம் அறிவுறுத்தியுள்ளாா்.
அப்போது, அங்கு பணிபுரியும் ஆசிரியா் காா்த்திக், சிலம்பரசனிடம் தகராறில் ஈடுபட்டு, தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிலம்பரசன் அளித்த புகாரின்பேரில், மாரண்டஅள்ளி போலீஸாா் ஆசிரியா் காா்த்திக் மீது வன்கொடுமை, அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

