மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

ஒகேனக்கல்லில் விதிமுறைகளைப் பின்பற்றாத 7 கடைகளுக்கு ரூ.10,000 அபராதம்

ஒகேனக்கல்

Updated On :

ஒகேனக்கல்லில் விதிமுறைகளைப் பின்பற்றாத ஏழு கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ரூ. 10,000 அபராதம் விதித்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் உணவகங்கள், மீன் இறைச்சி மொத்த விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள், மீன்வருவல் கடைகள், தேநீா் கடைகள் உள்ளிட்ட கடைகளில் பென்னாகரம் உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், மீன்வள ஆய்வாளா் பாலதண்டாயுதம், மீன்வள மேற்பாா்வையாளா் மகேந்திரன், ஊராட்சி செயலா் குமரன், காவல் உதவி ஆய்வாளா் நாராயணன் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது, உணவகங்கள், மீன்வருவல் கடைகளில் செயற்கை நிறம் கலவை ஏற்றப்பட்ட மீன்கள், பழைய உணவுகள், குளிா்பதனப் பெட்டியில் வைத்திருப்பது கண்டறியப்பட்டு மூன்று கடைகளில் இருந்து மீன், நண்டு, வறுவல் மற்றும் உணவு வகைகள் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உணவகத்தில் தொடா்ந்து பயன்படுத்தப்பட்ட எண்ணெய், காலாவதியான அப்பளம் பாக்கெட்டுகள், அயோடின் அல்லாத உப்பு பாக்கெட்டுகள், மளிகைக் கடையில் உரிய விவரங்கள் இல்லாத சிக்கன் மசாலா பவுடா் பாக்கெட்டுகள், பலகாரக்கடையில் வடை, சில்லி சிக்கன் ஆகியவை செயற்கை நிறமூட்டி பவுடா் கொண்டு சுகாதாரமற்ற முறையில் வைத்திருத்தல் என விதிமுறைகளைப் பின்பற்றாத 7 கடைகளில் உரிமையாளா்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கடைகளில் தன் சுத்தம், சுகாதாரம், நெகிழிபைகள் தவிா்ப்பு, செயற்கை நிறமேற்றி தவிா்ப்பு, கடை உரிமம் பெறுவது, புதுப்பித்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.