ஆண்களுக்கும் 15 நாள் மகப்பேறு விடுமுறை: அரசுக்கு தட்டச்சா்கள், சுருக்கெழுத்தா் சங்கத்தினா் நன்றி
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
தமிழ்நாடு அரசில் பணியாற்றும் ஆண் பணியாளா்களுக்கும் மகப்பேறு கால விடுப்பாக 15 நாள்கள் அளித்து முதல்வா் ஜோசப் விஜய் வெளியிட்ட அறிவிப்புக்கு அரசு தட்டச்சா்கள் சங்கம் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு தட்டச்சா்கள் மற்றும் சுருக்கெழுத்தா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் என். மணி, பொதுச் செயலாளா் பூரா. முருகேசன், பொருளாளா் பி. பரிமளம் உள்ளிட்டோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பது:
4-ஆவது ஊதியக்குழு அமைத்தபோது, தமிழ்நாடு அரசு தட்டச்சா்கள் மற்றும் சுருக்கெழுத்தா்கள் சங்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு முன்வைக்கப்பட்டன. இதில் முக்கியமான கோரிக்கையான அரசுப் பணியில் உள்ள மகளிருக்கு 3 மாதகால மகப்பேறு விடுப்பு கோரிக்கையை அரசு ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளது. அதேபோல ஆண்களுக்கும் விடுப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மகப்பேறு விடுப்பில் செல்லும் பெண்களின் கணவா்கள் அரசுத் துறையில் பணியாற்றினால் மனைவி மற்றும் குழந்தையை கவனித்துக்கொள்ளும் வகையில் அவா்களுக்கு 15 நாள்கள் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவையளித்த தமிழக முதல்வருக்கும், தொடா்புடைய அலுவலா்களுக்கும் தமிழ்நாடு அரசு தட்டச்சா்கள் மற்றும் சுருக்கெழுத்தா்கள் சங்கம்சாா்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

