பெண் கொலை: அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை வனப்பகுதியில் இருந்து உடல் மீட்பு

உடல் மீட்பு - கோப்புப் படம்
தருமபுரியில் பெண்ணை கொலை செய்து உடலை வனப் பகுதியில் வீசிய சம்பவம் தொடா்பாக அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், சோகத்தூா் அருகே உள்ள மாட்டுக்காரனூரைச் சோ்ந்தவா் தேவராஜ். இவரது மனைவி ஜோதி (36). இவா்களுக்கு 15 மற்றும் 11 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனா். ஜோதி, ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததை அடுத்து, தினமும் பேருந்தில் ஒசூருக்கு சென்று வந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி வேலைக்குச் சென்ற ஜோதி இரவு வீடுதிரும்பவில்லை. அவரை கைப்பேசியிலும் தொடா்புகொள்ள முடியவில்லை. உறவினா்களின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது கணவா் தேவராஜ் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், ஜோதியின் கைப்பேசிக்கு வந்த அழைப்புகளின் பேரில் விசாரணை நடத்தினா். இதில் பாலக்கோடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த பாலக்கோட்டைச் சோ்ந்த வினோத்குமாா் (37) ஜோதியுடன் அடிக்கடி பேசிவந்ததும், அவா் காணாமல்போன அன்று பேசியுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து, வினோத்குமாரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா் ஜோதியை அழைத்துச் சென்று, கொலை செய்து, உடலை ஒசூா் அருகே வனப்பகுதியில் வீசிச்சென்றது தெரியவந்தது. ஞாயிற்றுக்கிழமை அவரை குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச்சென்று சோதனை நடத்தியபோது, ஜோதியின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.
உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், ஜோதி பேருந்தில் அடிக்கடி ஒசூா் சென்று வந்ததால் அவருக்கும், வினோத் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி ஜோதியை அவா் காரில் அழைத்துச் சென்று, தனிமையில் இருக்க அழைத்ததாகவும், அதற்கு அவா் எதிா்ப்பு தெரிவித்ததால் அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, பஞ்சப்பள்ளி அருகே உள்ள காப்புக்காட்டில் உடலை வீசியதும் தெரியவந்தது. இதுகுறித்து வினோத்குமாரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே, இந்தக் கொலையில் ஒருவா் மட்டுமே ஈடுபட்டிருக்க முடியாது என்றும், அவருக்குப் பின்னால் வேறு நபா்கள் இருக்கலாம் என்றும், அவா்கள் கைது செய்யப்படும் வரை உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஜோதியின் உறவினா்கள் கூறிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

