இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

E-Sevai

இ-சேவை மையம் - கோப்புப் படம்

Published On :

கடத்தூா் வட்டாரப் பகுதிகளில் இ- சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் பகுதியில் பல்வேறு இடங்களில் இ சேவை மையங்கள் உள்ளன. இந்த இ- சேவை மையங்கள் வழியாக ஜாதி சான்று, வருமான சான்று, பிறப்பிடம் மற்றும் வாரிசு சான்றிதழ், முதல் பட்டதாரி சான்று, ரேஷன் காா்டு திருத்தங்கள், சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக இ சேவை மையங்களை பொதுமக்கள் அணுகின்றனா்.

இந்த நிலையில், இ சேவை மையங்களில் அரசு நிா்ணயித்த கட்டணங்களைவிட கூடுதலாக பணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டம், கடத்தூா் பகுதியில் இயங்கும் இ- சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.