ஏலச்சீட்டு மோசடி: பணத்தை மீட்டுத் தரக்கோரி மனு
ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவரிடமிருந்து பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்கள் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
மோசடி
ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவரிடமிருந்து பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்கள் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த மனுவில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பூதநத்தம் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிதிநிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஏலச்சீட்டு கட்டி வந்தோம்.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலச்சீட்டு நடத்தி வந்த அந்த நிறுவனம், கடந்த 2 ஆண்டுகளாக கட்டிய பணத்தை திருப்பித்தராமல் மோசடி செய்து வருகிறது. பலமுறை பணத்தைக் கேட்டும் நாங்கள் செலுத்திய பணம் கிடைக்கப்பெறவில்லை.
எனவே, இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி எங்களது சீட்டுப் பணத்தை திரும்பப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




