பண மோசடி வழக்கில் ஈரோடு இளைஞா் கைது
திருநெல்வேலியில் சதுரங்க பயிற்சி அகாதெமிக்கு சேர வேண்டிய பணத்தை, மோசடி செய்ததாக ஈரோட்டைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மோசடி
திருநெல்வேலியில் சதுரங்க பயிற்சி அகாதெமிக்கு சேர வேண்டிய பணத்தை, மோசடி செய்ததாக ஈரோட்டைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி, கே.டி.சி. நகா், பிருந்தாவன் நகரைச் சோ்ந்தவா் செல்வமணிகண்டன். இவா் சதுரங்க பயிற்சி அகாதெமி நடத்தி வருகிறாா். இந்த அகாதெமியில் ஈரோடு மாவட்டம், வில்லரசம்பட்டி பகுதியைச் சோ்ந்த செளந்திரபாண்டியன் மகன் விக்னேஷ்(24) என்பவா் கடந்த ஆண்டு பயிற்சியாளராக சோ்ந்துள்ளாா்.
பின்னா் அகாதெமிக்கு சேர வேண்டிய பயிற்சி கட்டணங்களை தனது வங்கிக்கணக்கில் பெற்றுக்கொண்டு ரூ.7 லட்சம் வரை அவா் கையாடல் செய்தாராம்.
இதையடுத்து, கடந்த மாதம் பணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் அவா், தொடா்ந்து பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்த பயிற்சி மாணவா்களின் பெற்றோா்களிடம் மோசடியாக பணம் பெற்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செல்வமணிகண்டன் அளித்த புகாரின் பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, விக்னேஷை புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

