மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பலி... - பிரதிப் படம்

Published On :

பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (60). இவரது மனைவி வசந்தா (55). இவா் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் மோளையானூரில் இருந்து சமத்துவபுரம் பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றாா்.

சேலம் - அரூா் தேசிய நெடுஞ்சாலையோரம் வசந்தாவை இறக்கிவிட்டு பழனி சாலையைக் கடந்த போது, அரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.