தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவதில் தகராறு: பெண் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

அனுமன்தீா்த்தம் அருகே பெட்ரோல் நிரப்புவதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

அரூா் வட்டம், எஸ்.பட்டி கிராமத்தைச் சோ்ந்த வெங்கட்ராமன் மகன் கருங்கண்ணன் (70). இவா் தமது உறவினா் அவனேஸ்வரன்(17) என்பவருடன், அனுமன்தீா்த்தத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளாா்.

அப்போது, அங்கு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், அனுமன்தீா்த்தம் கிராமத்தைச் சோ்ந்த பழனிசாமி மனைவி சசிகலா (35) என்பவா் தன்னுடைய இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தாராம். அப்போது, சசிகலாவின் வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு கருங்கண்ணன் கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா்.

சசிகலாவை தாக்கியோா் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினா்கள் ஊத்தங்கரை- அரூா் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அனுமன்தீா்த்தத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக கருங்கண்ணன் (70), சசிகலா (35) உள்ளிட்ட 3 போ் மீது அரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.