அரூரில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ. 7,500 அபராதம்
அரூரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை ரூ. 7,500 அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம்
அரூரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை ரூ. 7,500 அபராதம் விதிக்கப்பட்டது.
அரூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரூா் நகராட்சியின் ஆய்வுக் குழுவினா் பல்வேறு வணிக நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.
இதையடுத்து, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு ரூ. 7,500 அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் முற்றிலுமாக கைவிட வேண்டும். அரூா் நகராட்சிப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையை உறுதிசெய்யும் வகையில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான தொடா் ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையா் விஜயா ஸ்ரீ தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






