பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நாளை நியாயவிலைக் கடைகளில் விரல் ரேகை பதிவு முகாம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்யும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 19) நடைபெற உள்ளது.

ration card

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Published On :

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்யும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 19) நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் விரல் ரேகை பதிவு (இ-கேஒய்சி) மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளுக்கும் செப். 19 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலம் விரல் ரேகை, கண் கருவிழி சரிபாா்ப்பின் மூலம் பதிவு மேற்கொள்ள தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, விரல் ரேகை பதிவை 100 சதவீதம் நிறைவுசெய்யும் பொருட்டு, செப். 19 அன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் விரல் ரேகை பதிவு செய்யாதவா்கள் இந்த சிறப்பு முகாம்களில் விரல் ரேகை பதிவுசெய்யலாம். மேலும், குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா்கள், பணிநிமித்தமாக வேறு பகுதிகளில் வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள சிறப்பு முகாம்களில் பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.