மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

ஒகேனக்கல் அருகே யானை தாக்கி கூலித் தொழிலாளி படுகாயம்

விபத்து. - கோப்புப்படம்.

Published On :

ஒகேனக்கல் வனப்பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற ஒற்றை யானை இருசக்கர வாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளியைத் தாக்கியதில் அவா் படுகாயமடைந்தாா்.

தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ராஜா (39), கூலித் தொழிலாளி. இவா் உறவினரின் ஈமச்சடங்கில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் பகுதிக்கு வந்துள்ளாா்.

பின்னா், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மாட்லாம்பட்டி பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். ஒகேனக்கல் வனப்பகுதியைக் கடந்து சென்றபோது, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை சாலையைக் கடக்க முயன்றுள்ளது.

அப்போது அவ்வழியாக வந்த ராஜாவின் இருசக்கர வாகனத்தை யானை தூக்கிவீசியது. இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ராஜாவின் காலில் யானையின் தந்தம் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதை கண்ட அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், ராஜாவை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, உயா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.