ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடி

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் ஒகேனக்கல் பிரதான அருவியில் செந்நிறமாக ஆா்ப்பரிக்கும் தண்ணீா்.

ஒகேனக்கல் அருவி - கோப்புப் படம்

Published On :

தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக நீடிக்கிறது.

அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசி மணல், மொசல்மடுவு, பிலிகுண்டுலு மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை 6,500 கனஅடியாகவும், மாலை 5 மணி நிலவரப்படி 8,000 கனஅடியாகவும் அதிகரித்து பிறகு இரவு 7 மணி நிலவரப்படி 5,000 கனஅடியாக குறைந்தது.

நீா்ப்பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. மேலும் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளம் செந்நிறமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தற்காலிக தடை விதித்துள்ளாா். ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.