வாகனம் மோதியதில் முதியவர் சாவு
அரூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ராமச்சந்திரன் (60) வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
அரூரை அடுத்த கௌôப்பாறை கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் மகன் ராமச்சந்திரன் (60). இவர் தமது சொந்த வேலையின் காரணமாக மோட்டார் சைக்கிளில் அரூர் - சேலம் சாலையில் கோ.கூட்டு ரோடு நோக்கிச் சென்றார்.
அப்போது சின்னாங்குப்பம் அருகே மாரியம்மன் கோயில் எனுமிடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் முதியவர் ராமச்சந்திரன் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அவரது மகன் லட்சுமணன் (34) அளித்த புகாரின் பேரில், அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
