
கோயில் பூசாரி ஜீவசமாதி அடையப்போவதாக தகவல் பரவியதால் பரபரப்பு
தேன்கனிக்கோட்டை அருகே சிவன்கோயில் பூசாரி செவ்வாய்க்கிழமை (செப்.15) ஜீவசமாதி அடையப்போவதாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேன்கனிக்கோட்டை அருகே சிவன்கோயில் பூசாரி செவ்வாய்க்கிழமை (செப்.15) ஜீவசமாதி அடையப்போவதாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், அய்யூர் அருகேயுள்ள
குருபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாராச்சாரி (90). இவரது மனைவி ருக்மணியம்மாள் (78). இந்தத் தம்பதிக்கு நான்கு மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, அங்குள்ள சிவன் கோயிலில் மாராச்சாரி பூசாரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில், கோயில் அருகே குழி தோண்டி வைத்துள்ள பூசாரி மாராச்சாரி, தான் இறந்த பின்னர் அந்த இடத்தில் தனது உடலைப் புதைக்க வேண்டும் என கிராம மக்களிடம் கூறினாராம். இதற்கிடையே கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் பூசாரி மாராச்சாரி செவ்வாய்க்கிழமை ஜீவசமாதி அடையப்போவதாக தகவல் பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் கோவிந்தன், காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் குருபட்டிக்கு சென்று உயிருடன் இருக்கும் நபர் இறப்பதற்கு முன்பாக அவரை
அடக்கம் செய்வதற்காகக் குழி தோண்டி வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்றனர்.
இதையடுத்து அந்தக் குழி மூடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




