காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கல்லாவி காவல் நிலையத்தை கோழிநாய்க்கன்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
Updated on
1 min read

கல்லாவி காவல் நிலையத்தை கோழிநாய்க்கன்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
மேட்டுத்தாங்கல்  ஊராட்சிக்குள்பட்ட  கோழிநாய்க்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் குறித்து அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானதாகப் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக கல்லாவி ஊராட்சிக்குள்பட்ட  பெருமாள் நாய்க்கன்பட்டியைச் சேர்ந்த சில இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,  கோழிநாய்க்கண்பட்டி  கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கல்லாவி காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை  முற்றுகையிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பெருமாள்நாய்க்கன்பட்டிகிராமத்தைச் சேர்ந்த ராஜாராம்வளவன் (17)  பிடிபட்டு சேலம் சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாகவும்,  அவரது நண்பர் முருகவேலை (17)  தேடி வருவதாகவும்,  தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  காவல் ஆய்வாளர் வீரப்பன், உதவி ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் கூறினர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com