2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி புகைப்படக் கண்காட்சி

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி,  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:47 am

DIN

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி,  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட இந்தக் கண்காட்சியை இளைஞர் நலன்- விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி தொடக்கி வைத்து பார்வையிட்டார். 
மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி,  மக்களவை உறுப்பினர் கே.அசோக்குமார்,  எம்எல்ஏக்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ்,  செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கண்காட்சியில், தமிழக அரசின் நலத்திட்டங்கள்,  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்த திட்டங்கள்,  கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்வுகள்,  அரசின் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.