துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

ஜவளகிரி அருகே வன ஊழியர்கள் மீது தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஜவளகிரி வனப்பகுதியில் ரோந்து சென்ற 3 வன ஊழியர்களைத் தாக்கிய 10 பேர் தப்பியோடிவிட்டனர்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 9:20 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஜவளகிரி வனப்பகுதியில் ரோந்து சென்ற 3 வன ஊழியர்களைத் தாக்கிய 10 பேர் தப்பியோடிவிட்டனர்.
ஜவளகிரி அருகே கெட்டுணிசை கிராமத்தில் உள்ள ஏரிக்கு யானைகள் தண்ணீர் குடிக்க வந்த யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லவில்லை. இதுகுறித்து ஜவளகிரி வனச் சரகர் முருகேனுக்கு தகவல் கிடைத்தது. 
இதைத் தொடர்ந்து விவசாயப் பயிர்களைக் காக்கும் பொருட்டு வனக்காவலர் முருகன், வேட்டை தடுப்பு காவலர்கள் ஜெயக்குமார், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரும் கெட்டுணிசை கிராமத்துக்குச் சென்று யானைகளை விரட்ட முயன்றபோது அங்கு வந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விவசாயப் பயிர்களை யானைகள் மிதித்து சேதப்படுத்தியுள்ளது எனப் புகார் தெரிவித்தனர். அப்போது விவசாயிகளுக்கும், வனத்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 வனத்துறையினரை விவசாயிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்த வன ஊழியர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.