ஐவிடிபி தொண்டு நிறுவன மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.480 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு
ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனாக ரூ.480 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனாக ரூ.480 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 12,350 மகளிர் சுய உதவிக் குழுக்களில் 2 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது.
இக் குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் பொருளாதார ரீதியில் உயர்ந்து, சமூகத்தில் சுய சார்புடையவர்களாக இருக்க பல்வேறு பயிற்சிகள், கடனுதவிகள் வழங்கி, அவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறது.
சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 2018-2019-ஆம் நிதியாண்டில் வங்கி கடனுதவி வழங்குவதற்கான செயல் திட்ட கூட்டம், கிருஷ்ணகிரியில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன தலைமை அலுவலக கூட்ட அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இந்தியன் வங்கியின் வேலூர் மண்டல மேலாளர் சுந்தராஜ், சேலம் துணை மண்டல மேலாளர் ரவிக்குமார், கிருஷ்ணகிரி துணை மண்டல மேலாளர் திருமாவளவன், பல்லவன் கிராம வங்கி பெருந்தலைவர் தனராஜ், வட்டார மேலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் ஆகிய மண்டலங்களில் உள்ள இந்தியன் வங்கியின் 28 கிளைகள் மூலம் 5,305 குழுக்களுக்கு ரூ.215 கோடியும், பல்லவன் கிராம வங்கியில் 25 கிளைகள் மூலம் 6,703 குழுக்களுக்கு ரூ.230 கோடியும், பாங்க் ஆப் இந்தியா வங்கியின் 2 கிளைகள் மூலம் 756 குழுக்களுக்கு ரூ.35 கோடி என மொத்தம் 55 வங்கி கிளைகள் மூலம் 12,010 குழுக்களுக்கு ரூ.480 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவற்றை வங்கியாளர்களே தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் ஜோஸ்வா, நந்தினி ஜோஸ்வர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

