கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி சமபந்தி போஜனம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி ஆணையர் (ஆயம்) முரளி தலைமை வகித்தார். ஊத்தங்கரை வட்டாட்சியர் மாரிமுத்து, முன்னாள் பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.இ. கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஏ.சி. தேவேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணன், கோயில் முன்னாள் தர்மகர்த்தா சிவானந்தம் மற்றும் ஊர்பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சமபந்தியில் கலந்து கொண்டனர்.