போச்சம்பள்ளி அருகே ஏரிக்கு தண்ணீர் விடக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போச்சம்பள்ளி அருகே உள்ள பாளேகுளி ஏரியில் இருந்து கால்வாய் மூலம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், ஆவலக்கம்பட்டி ஏரிக்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை என கிராம மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் மோட்டூர் கிராமத்தில் போச்சம்பள்ளி - சந்தூர் சாலையில் திங்கள்கிழமை காலை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியது: இப்பகுதியில் போதிய மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாய நிலத்தில் உள்ள மாமரங்கள், தென்னைகள் காய்ந்து வருவதால், ஆவலக்கம்பட்டி ஏரிக்கு தண்ணீர் விட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போச்சம்பள்ளி போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








