9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: போராட்டக்காரர்களைச் சந்தித்து கொமதேக ஆதரவு

பென்னாகரம் அருகே விவசாய விளைநிலங்களில் அனுமதியின்றி உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து

Updated On :31 டிசம்பர் 2018, 8:28 am IST

பென்னாகரம் அருகே விவசாய விளைநிலங்களில் அனுமதியின்றி உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து, விவசாய சங்கத்தினர் 7 ஆவது நாளாக மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
பென்னாகரம் அருகே எட்டியாம்பட்டியில் விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை விவசாயச் சங்கத்தினரைச் சந்தித்து ஈஸ்வரன் ஆதரவு தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  ஈஸ்வரன்,  விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்குப் பதிலாக சாலையோரங்களில் கேபிள் மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். 
7 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைச் சந்தித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல. விவசாய சங்கத்தினர் மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு அளிக்கும் என்றார். முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு, மாவட்ட தலைவர் மல்லையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.