ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திரையரங்கு உரிமையாளர் உள்பட இருவர் கைது

கிருஷ்ணகிரியில் புதிய திரைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்த திரையரங்கு உரிமையாளர் உள்பட இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 1:26 am

DIN

கிருஷ்ணகிரியில் புதிய திரைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்த திரையரங்கு உரிமையாளர் உள்பட இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்தவர் முருகன்(51).  இவருக்குச் சொந்தமாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக சாலையில் திரையரங்கு உள்ளது. அந்தத் திரையரங்கில் கடந்த 16-ஆம் தேதி வெளியான "மனுசனா நீ'  என்ற திரைப்படத்தை திரையிட்டார்.
அப்போது அந்தத் திரைப்படத்தை அவரே திருட்டு வீடியோ எடுத்து சட்ட விரோதமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த படத்தின் தயாரிப்பாளர் வேலூர் போலீஸில் புகார் அளித்தார்.  அதன்பேரில் வேலூர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸார்  கிருஷ்ணகிரிக்கு வந்து முருகனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில்,  சட்ட விரோதமாக அவர்,  புதிய திரைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது.  இதையடுத்து,  முருகன், திரையரங்கு ஆபரேட்டர் துரை (50) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து,  அவர்கள் பதிவேற்றம் செய்யப் பயன்படுத்திய இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.