தென்பெண்ணையாற்றில் வீணாக வெளியேறும் தண்ணீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பாரூர், பண்ணந்தூர், வாடமங்கலம், புலியூர், பெனுகொண்டாபுரம் ஏரி, களர்பதி ஏரி, திப்பனூர் ஏரி மற்றும் அதன் சுற்றுப்புற ஏரிகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகின்றன. இதே நிலை நீடித்தால் அடுத்த போக விளைச்சலுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஜி.ஆர்.சக்கரவர்த்தி கூறுகையில், கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக அதிகளவு தண்ணீர் தென்பெண்ணையாற்றில் வெளியேறுகிறது. இந்த தண்ணீரை ஏரிகளுக்கு கொண்டுசெல்ல அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். அதற்கு மாறாக மீன்பிடி குத்தகைதாரர்களுக்கு உதவியாக ஏரியில் உள்ள தண்ணீரை வடித்து மீன் பிடிக்க உதவியாக இருந்து வருகின்றனர். பாரூர் பெரிய ஏரியில் இருந்து வரும் தண்ணீரை ஆதாரமாக கொண்டு 5 ஆயிரம் எக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும், இந்த ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் திப்பனூர் ஏரிக்குச் சென்று அங்கிருந்து பெனுகொண்டாபுரம் ஏரிக்குச் செல்கிறது. பாரூர் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் கொண்டு 12 ஏரிகளுக்கு நீர்ஆதாரமாக விளங்குகிறது. இவ்வளவு முக்கியமான ஏரியில் தண்ணீர் நிரப்புவதில் அதிகாரிகள் முன்வராதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜன் வகையறாவில் கவனம் செலுத்தும் வெற்றி மாறன்!

கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும்!

பிகார் முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

