வெய்யில் காலத்தில் பலருக்கும் வாய்ப்புண் அதிகம் ஏற்படும். இது மிகவும் சிறியதாக இருந்தாலும் வலி, எரிச்சல் என பல அசௌகரியங்களை ஏற்படுத்தும்.
வாய்ப்புண் என்பது வாயின் உள்ளே அல்லது ஈறுகளின் அடிப்பகுதியில் உருவாகும் சிறிய புண்கள். இது சிலருக்கு லேசான வலியாகவும் சிலருக்கு அதிக வலியாகவும் இருக்கலாம்.
பற்களின் மேல் உள்ள ஈறுகள், நாக்கு, கன்னங்களின் உள்பகுதி, உதடுகளின் உள்பகுதியில் ஏற்படலாம்.
காரணம்?
உடல் சூடு அதிகமாக இருத்தல், பற்களைத் தேய்க்கும்போது காயம், கூர்மையான பற்கள், பாக்டீரியா தொற்று, அதிக ரசாயனம் மிகுந்த பற்பசையைப் பயன்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் ஏற்படலாம்.
இதுதவிர பற்களில் செய்யப்படும் சிகிச்சைகளாலும் வாய்ப்புண் ஏற்படலாம்.
அதேபோல மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள், மரபியல் காரணங்களாலும் வாய்ப்புண் வரலாம்.
வாய்ப்புண் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது. ஓரிரு வாரங்களில் வாய்ப்புண் சரியாகிவிடும். அதற்கு மேல் இருந்தாலோ வலி அதிகமாக இருந்தாலோ கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது நல்லது.
அதிக அமிலம் நிறைந்த உணவுகளாலும் சிலருக்கு வாய்ப்புண் ஏற்படலாம்.
என்ன செய்ய வேண்டும்?
காய்கறிகள், பழங்கள், புரதம், இரும்புச்சத்து என சமச்சீரான உணவைச் சாப்பிட வேண்டும்.
இளநீர், தயிர், வாழைப்பழம், நெல்லிக்காய், வெள்ளரிக்காய், கீரை வகைகள் உடல் சூட்டை குறைத்து வாய்ப்புண் ஆற உதவும்.
மிக காரமான உணவுகள், புளிப்பு உணவுகள், பொரித்த உணவுகள், அதிகமாக காபி குடிப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
வாயைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இரவு தூங்கும் முன்பாக பல் துலக்குவது, வாய் கொப்புளிப்பது அவசியம்.
நல்ல தூக்கம் இருக்க வேண்டும், மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்.
உணவுப்பழக்கவழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
வாய்ப்புண்களை ஏற்படுத்தும் மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.
பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளாலும் ஏற்படும் என்பதால் அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும்.
Summary
Mouth Ulcer: Types, Causes and Treatment
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டின் உண்மையான பொருளாதார நிலை என்ன? மோடிக்கு கேஜரிவால் கேள்வி!

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

30+ ஆகிவிட்டதா? பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்!

உதடுகள் வெடிப்பா? என்ன செய்ய வேண்டும்?
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


