சிலருக்கு உதடுகள் எப்போதும் வெடித்துக் காணப்படும், உதட்டில் எச்சிலைத் தடவிக்கொண்டே இருப்பார்கள், வெடிப்பு அதிகமாகி உதடுகளில் இருந்து ரத்தம்கூட வரும். இப்படி உதடுகள் வறட்சியுடன் வெடிப்பாக இருந்தால் அதற்கு சில காரணங்கள் உள்ளன.
குளிர்ந்த கால நிலை, குறிப்பாக குளிர் காலங்களில் உதடுகளில் வறட்சி ஏற்படும். எனவே குளிர் காலங்களில் உங்கள் உதடுகளுக்கு ஏற்றவாறு லிப் பாம், ஆயில் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
இதேபோல அதிக வெய்யில் காரணமாகவும் உதடுகளில் வெடிப்பு ஏற்படலாம்.
அடுத்து நீர்ச்சத்து குறைவினால் உதடுகளில் வெடிப்பு ஏற்படலாம். அதனால் முடிந்த அளவுக்கு நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள், பழச்சாறுகள், இளநீர் ஆகியவற்றைக் குடிக்கலாம்.
அதுமட்டுமின்றி உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததாலும் ஏற்படலாம்.
நீங்கள் தயாரிக்கும் பேஸ்ட், லிப்ஸ்டிக், லிப் பாம் ஆகிய அழகு சாதனப் பொருள்களாலும் உதடுகளில் வெடிப்பு ஏற்படலாம்.
மாறாக, உதடு காய்ந்திருக்கிறது என்று உதட்டை எச்சிலால் ஈரப்படுத்துவதோ உதட்டைக் கடிப்பதோ கூடாது. எச்சிலில் இருக்கும் பாக்டீரியா உதட்டில் புண்களை ஏற்படுத்தலாம். அதேபோல ஈர்ப்பதத்துக்கு நாம் உதட்டில் எச்சிலைத் தடவினால் உண்மையில் அது வறட்சியைத்தான் ஏற்படுத்தும்.
தூங்கச் செல்லும் முன்பாக உதடுகளில் இருக்கும் லிப்ஸ்டிக்கை அகற்றுவதும் உதடு வறட்சியைக் கட்டுப்படுத்தும்.
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், தேன், வெண்ணெய், கற்றாழை, பழச்சாறுகளை உதடுகளில் தடவலாம்.
நெல்லிக்காய், ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி சத்துள்ள பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதிக ரசாயனம் இல்லாத தயாரிப்புகளை உதடுகளுக்கு பயன்படுத்துங்கள். ஏனெனில் அவற்றில் உள்ள ரசாயனமும் உதடுகள் வெடிப்புக்குக் காரணமாகலாம்.
உதடு வெடிப்பு நீண்ட நாள்கள் இருக்கும்பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
Summary
Chapped Lips: Causes and Prevention
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிறரை உயர்த்தும் மனம் கொண்டவர்கள் மகர ராசியினர்!

கடும் வறட்சி களக்காடு தலையணை மூடல்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

உதடுகள் வெடிப்பா? என்ன செய்யலாம்?

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


