இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் ராஜன் வகையறா படத்தையும் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் வெற்றி மாறன் நடிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ’வடசென்னை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநர் என்கிற பெயரையும் பெற்றுத்தந்தது.
தற்போது, வடசென்னையுடன் தொடர்புடைய அரசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில், நாயகனாக நடிகர் சிலம்பரசன் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் அண்மையில் நிறுத்தப்பட்டது. ஆனாலும், இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் கென்னை வைத்து ராஜன் வகையறா திரைப்படத்தின் காட்சிகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், நடிகர் தனுஷை அண்மையில் சந்தித்த வெற்றி மாறன் வடசென்னை மற்றும் ராஜன் வகையறாவுக்கான இணைப்பு கதாபாத்திரங்கள் குறித்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Director Vetrimaaran is also filming a movie titled Rajan Vagaiyara.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









