16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் தனுஷ்?

தனுஷ் புதிய படம் குறித்து...

dhanush

தனுஷ்

Published On :

நடிகர் தனுஷ் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் கர திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மம்மூட்டியும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது முடிந்ததும், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் படத்திலிருந்து விலகிக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தனுஷே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெங்கட் பிரபு சொன்ன கதை தனுஷுக்குப் பிடித்திருப்பதால் இந்தாண்டு இறுதிக்குள் இதுகுறித்து அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Reports have emerged that actor Dhanush is set to star under the direction of Venkat Prabhu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.