இயக்குநர் வெங்கட் பிரபு நம்பர் பிளேட் ஒன்றை முதல்வர் விஜய்க்கு பரிசளித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்று ஆதரவு கட்சிகளின் துணையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார்.
விஜய் பதவியேற்றது முதல் அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு இன்று முதல்வர் விஜய்யை சந்தித்து அவருக்குப் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். கோட் படம் தவெக தொடங்கப்பட்ட அதே ஆண்டில் வெளியானது. அந்தப் படத்தில், விஜய்யின் கார் நம்பர் பிளேட் 'TN 07 CM 2026' என்று அமைக்கப்பட்டிருக்கும். விஜய் 2026-ல் முதல்வர் ஆவார் என்று குறிப்பிடும்படி படத்தில் அதனை வைத்திருந்தார் வெங்கட் பிரபு.
இதனைத் தொடர்ந்து, அந்த நம்பர் பிளேட்டை முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு இன்று பரிசளித்தார். இதுதொடர்பான தனது எக்ஸ் தளப் பதிவில், “ஒரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அதனை முதல்முறையாக கோட் படத்தில் நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்” எனக் குறிப்பிட்டு விஜய்க்கு பரிசு வழங்கிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
Summary
Director Venkat Prabhu Gifts Number Plate to 'Chief Minister' Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெங்கட் பிரபு இயக்கத்தில் தனுஷ்?

இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்... முதல்வர் விஜய்க்கு இயக்குநர் ஷங்கர் வாழ்த்து!

பாரதம் வியக்க நல்லாட்சி புரிக! முதல்வர் விஜய்யை வாழ்த்திய இயக்குநர் பாலா!

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் விஜய்! விடியோவை பகிர்ந்த வெங்கட் பிரபு!
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani



