தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

14 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு ரூ.97 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், திங்கள்கிழமை வழங்கினார்.

Updated On :21 மே 2018, 10:49 pm

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு ரூ.97 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், திங்கள்கிழமை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.8,846 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.4,850 மதிப்புள்ள சிறப்பு சக்கர நாற்காலிகள், பார்வைக் குறைபாடு உடையவருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் உருப்பெருக்கி கருவி என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.97 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சந்தியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.