சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

தொகரப்பள்ளி அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை

Updated On :5 நவம்பர் 2018, 7:35 am IST

தொகரப்பள்ளி அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்தூர் அருகேயுள்ள தொகரப்பள்ளி புரடையன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (45). இவர் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் ரத்தினம் என்பவருடன், மத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். தொகரப்பள்ளி பிரிவு சாலை அருகே  திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. 
இதில் காயமடைந்த 2 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 
ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.