கோகுலாஷ்டமியையொட்டி, தருமபுரி அருகேயுள்ள ராதே கிருஷ்ணர், இஸ்கான் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தருமபுரியை அடுத்த ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள ஸ்ரீ ராதேகிருஷ்ணர் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தருமபுரி, இண்டூர், அதகப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
இஸ்கான் திருக்கோயில்: தருமபுரி அருகே பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதிக்கு எதிரே உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) திருக்கோயிலில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மங்கள ஆரத்தி, துளசி பூஜை, தர்சன ஆரத்தி, சந்தியா ஆரத்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு இஸ்கான் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரியில்... கோகுலாஷ்டமியையொட்டி, கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நரசிம்ம சுவாமி கோயில் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் மேள தாளங்களுடன் காந்தி சாலை, நேதாஜி சாலை, கோட்டை சாலை வழியாக சுவாமி நகர்வலம் சென்றது. இதேபோல், தர்மராஜ கோயிலில் உள்ள கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒசூரில்... ஒசூரில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயில்களில் கோகுலாஷ்டமி விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஒசூர் கோகுல்நகர் வேணுகோபால் சுவாமி கோயில், பாகலூர் சந்திப்பு அருகே உள்ள வேணுகோபால் சுவாமி கோயில், சூசூவாடி வேணுகோபால் சுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரதனைகள் நடைபெற்றது. கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலமாக காந்தி சாலை, நேதாஜி சாலை வழியாகச் சென்றனர். பாகலூர் சந்திப்பு அருகே விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங்கதள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் கிருஷ்ணர், ராதை சிலை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இட்லி கடை படத்தை விடக் குறைவு: கர முதல் நாள் வசூல் எவ்வளவு?

ம.பி. படகு விபத்து! குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல்!

தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு!

கர்நாடகத்தில் எச்5என்1 வைரஸ் தொற்றால் 44 மயில்கள் இறந்தன!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

