நெல் நவரை பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்ய பிப்.15-ஆம் தேதி இறுதி நாள் என கிருஷ்ணகிரி வேளாண்மை இயக்குநர் சுசீலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடுத் திட்டம், விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் 2018 - 19 -ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நவரை பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிரைக் காப்பீடு செய்ய அரசாணை வெளியிட்டு விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்து வருகின்றனர். இதன்படி, நிகழ்வாண்டில் கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் 196 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை
செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நியூ இந்தியா அஷுரன்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில், பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு நவரை பருவத்தில் நெல் பயிடும் விவசாயிகள், இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய பிப்.15-ஆம் தேதி இறுதி நாள் ஆகும். எனவே, இந்த பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.433.50 காப்பீடு பிரீமியம் தொகையைச் செலுத்தி, தங்களது நெல் பயிருக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் சரிவில் இந்திய ரூபாய்: 1 டாலர் - ரூ. 96.35! 54 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் - நேரலை!
முதல்வர் விஜய்க்கு நம்பர் பிளேட்டை பரிசளித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

நீட் வினாத்தாள் கசிவு: மேலும் ஒரு பேராசிரியர் கைது!
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
