மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
மாநில அளவிலான வில் வித்தை போட்டி-2019, சென்னையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் பல்வேறு பள்ளிகளிலிருந்து 1,000- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் 42 பேர் பங்கேற்று பரிசு மற்றும் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இப் போட்டியில் கலந்து கொண்ட 42 மாணவர்களில் 10 மாணவர்கள் தங்கப் பதக்கமும், 9 மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும், 9 மாணவர்கள் வெண்கலப் பதக்கமும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.
பல்வேறு பிரிவுகளில் பல்வேறு தொலைவுக்கான இந்திய வில்வித்தை போட்டியில் ஜி.எ. போமேஷ்வர், வி. பவதாரிணி, டி.எஸ்.சாதனா, டி.எஸ். கோஷினி, கே.நவீன்குமார், வி.எஸ். ராமகிருஷ்ணன், எம். பழனிவேல், எ. ஐஸ்வர்யா, எ.பார்கவி, கே. ராகுல் ஆகிய 10 பேர் தங்கப் பதக்கத்தையும் , எம். வினுஸ்ரீ, ஆர்.முகில், எஸ்.சச்சின், ஜி.கீர்த்திகா, வி.வினோத், எல்.வி.ரோகித், பி.தினேஷ்குமார், எஸ்.இசைமொழி, எஸ். கோகுல் ஆகிய 9 பேர் வெள்ளிப் பதக்கத்தையும், பி. ரக்ஷிதா, வி. ஸ்ரீமிதுன், எஸ்.சரித்ரா, எஸ்.ருதர்சன், கே.பிரித்திகமல், ஜெ.கோகுல்நாத், ஆர்.எஸ்.சங்கமித்திரை, வி.ரேனுகா மற்றும் எம்.வினோத்குமார் ஆகிய 9 பேர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அதியமான் பப்ளிக் பள்ளியில் பாராட்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது இதில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் கலந்துகொண்டு பாராட்டினார். நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன், அதியமான் பப்ளிக் பள்ளி முதல்வர் லீனாஜோஸ், ஆசிரிய, ஆசிரியைகள் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









