கூட்டுப் பண்ணைத் திட்டத்தின் கீழ் ரூ.2.60 கோடி மதிப்பிலான பண்ணை இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், வேளாண்மைத் துறை சார்பில், கூட்டுப் பண்ணையத் திட்டம் 2018 - 19-ன் கீழ் வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் சு.பிரபாகர் பேசியது: கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளை ஒன்றினைத்து கூட்டாக அனைத்து விவசாயிகளும் ஒரே நோக்கில் சாகுபடி செய்தல், இடுபொருள்களை கூட்டாக கொள்முதல் செய்வதன் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி, கூடுதல் நிகர லாபம் பெற உதவும், கூட்டாகச் சந்தைப் படுத்துவதே நோக்கம் ஆகும்.
2018 - 2019 -ஆம் ஆண்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் 260 உழவர் ஆர்வலர் குழுக்கள் தொடங்கப்பட்டு, விவசாயிகள் பங்குத் தொகையை செலுத்தி வங்கிக் கணக்கைத் தொடங்கி உள்ளனர். மேலும், வேளாண்மைத் துறையின் மூலம், 52 உழவர் ஆர்வலர்கள் குழு தொடங்கப்பட்டு, மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தொகுப்பு நிதி பெறப்பட்டவுடன், ரூ.2.60 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு தேவையான பண்ணை இயங்திரங்கள் வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தோட்டக்கலை இணை இயக்குநர் கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழைகளின் இறைவன் எம்.ஜி.ஆர்

வரப்பெற்றோம் (11.05.2026)

மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற முதல்வர் Vijay! | TVK | DMK

அன்புமணி இல்லத்தில் முதல்வர் விஜய்!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
