அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கூட்டுப் பண்ணைத் திட்டத்தின் கீழ் ரூ.2.60 கோடி மதிப்பில் பண்ணை இயந்திரங்கள்: ஆட்சியர் தகவல்

கூட்டுப் பண்ணைத் திட்டத்தின் கீழ் ரூ.2.60 கோடி மதிப்பிலான பண்ணை இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை

Updated On :23 ஜனவரி 2019, 9:33 am IST

கூட்டுப் பண்ணைத் திட்டத்தின் கீழ் ரூ.2.60 கோடி மதிப்பிலான பண்ணை இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்தார். 
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், வேளாண்மைத் துறை சார்பில், கூட்டுப் பண்ணையத் திட்டம் 2018 - 19-ன் கீழ் வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் சு.பிரபாகர் பேசியது: கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளை ஒன்றினைத்து கூட்டாக அனைத்து விவசாயிகளும் ஒரே நோக்கில் சாகுபடி செய்தல், இடுபொருள்களை கூட்டாக கொள்முதல் செய்வதன் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி,   கூடுதல் நிகர லாபம் பெற உதவும்,  கூட்டாகச் சந்தைப் படுத்துவதே நோக்கம் ஆகும். 
2018 - 2019 -ஆம் ஆண்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் 260 உழவர் ஆர்வலர் குழுக்கள் தொடங்கப்பட்டு, விவசாயிகள் பங்குத் தொகையை செலுத்தி வங்கிக் கணக்கைத் தொடங்கி உள்ளனர். மேலும், வேளாண்மைத் துறையின் மூலம், 52 உழவர் ஆர்வலர்கள் குழு தொடங்கப்பட்டு, மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தொகுப்பு நிதி பெறப்பட்டவுடன், ரூ.2.60 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு தேவையான பண்ணை இயங்திரங்கள் வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. 
இந்த கூட்டத்தில் தோட்டக்கலை இணை இயக்குநர் கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன்,  விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.