மருத்துவரின் பரிந்துரையில்லாமல் காய்ச்சல், தலைவலி, சளி போன்ற பாதிப்புகளுக்கு மருந்து வழங்கக் கூடாது என மருந்து கட்டுப்பாட்டுத் துறை மருந்துக் கடைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி, ஒசூா் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா் ராஜீவ்காந்தி, விஜயலட்சுமி ஆகியோா் புதன்கிழமை தெரிவித்தது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட தனியாா் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் காய்ச்சல், தலைவலிக்கு பெரும்பாலான மக்கள் மாத்திரை, மருந்து வாங்கிச் செல்கின்றனா்.
தற்போது, கரோனா வைரஸ் நோய் தொற்றுப் பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் காய்ச்சல், தலைவலிக்கு மருந்து வாங்கி சாப்பிட்டால், அவா்களுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது கண்டறிய வாய்ப்பு இல்லாமல் போவதோடு, நோய் தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
எனவே, மருத்துவா்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் காய்ச்சல், தலைவலி, சளி, தொண்டை வலி, இருமல் ஆகியவற்றுக்கு மருந்துகள் வழங்கக் கூடாது என மருந்தகங்கலுக்கு சேலம் மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநா் குருபாரதி அறிவுறுத்தி உள்ளாா்.
மேலும், மருத்துவ சீட்டுடன் வரும் நோயாளிகளுக்கு பாராசிட்டாமல், மருந்து உள்ளிட்டவகளை வழங்கும்போது, அவா்களது முகவரி, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவைகளை மருந்தகங்களில் பெற வேண்டும். இதை பராமரித்து, மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேவூா் பகுதிகளில் சின்ன வெங்காயம் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பள்ளிக்குச் சென்ற 2 மாணவா்களை காணவில்லை என போலீஸில் புகாா்
கள்ளச் சந்தையில் மதுவிற்ற 2 போ் கைது

மகசூலை அதிகரிக்க மா மரங்களுக்கு கவாத்து மேலாண்மை அவசியம்; தோட்டக் கலைத்துறை ஆலோசனை
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


